JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, August 14, 2020

சீத பேதி, சிறுநீர் எரிச்சலை தடுக்கும் - முலாம் பழம்


வெயில் காலத்தில் ஏற்படும் சோர்வை போக்குகிறது. சிறுநீர் எரிச்சலை தடுக்கும். மிகுந்த சத்தூட்டமான உணவாகிறது. கர்ப்பிணி பெண்கள் இதை எடுத்துக்கொண்டால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். குழந்தையின் முதுகெலும்பு, மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

மலிவாக கிடைக்க கூடிய முலாம் பழத்தை பயன்படுத்தி உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும் பானம் தயாரிக்கலாம். விதைகள் நீக்கிய முலாம் பழத்துடன், கால் ஸ்பூன் சீரகப் பொடி, 2 சிட்டிகை சுக்குப் பொடி, சிறிது பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை சாப்பிட்டுவர வயிற்று வலி, வயிற்றுபோக்கு சரியாகும். வெயிலால் ஏற்படும் நோய்களை குணமாக்கும். சீத பேதி, கழிச்சலுக்கு மருந்தாகிறது.

No comments:

Post a Comment