Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, August 4, 2020

OBC இடஒதுக்கீடு - தமிழக அரசின் அடுத்த அதிரடி

மருத்துவப்படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 50-சதவிகித இடஒதுக்கீடை நடப்பு ஆண்டே அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50-சதவிகித இடஒதுக்கீடு வழங்க தனிச்சட்டம் இயற்றலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மத்திய அரசு மூன்றுமாதங்களில் இதற்கான ஆய்வுப்பணியை மேற்கொண்டு முடிவு எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழக அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், நடப்பு ஆண்டே மருத்துவப்படிப்பில் 50 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரப்பட்டிருக்கிறது.

உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி மருத்துவ மேற்படிப்பிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு குழு அமைத்து, விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தீர்ப்பை இந்த ஆண்டே அமல்படுத்தவேண்டும் என்றும் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment