Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 26, 2020

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்காக 6 மாதத்திற்கு பிறகு தயாராகும் பள்ளிகள்: ஆயத்த பணிகள் தொடக்கம்.

கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை என்றாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வரும் 1ம் ேததி முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கி நேற்று முன்தினம் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. 
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள், தங்களது பெற்றோரின் அனுமதியுடன் பாடம் தொடர்பான சந்தேகங்களை கேட்க பள்ளிக்கு வரலாம். மாணவர்கள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ஒரு பிரிவினரும், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மற்றொரு பிரிவினரும் பள்ளிக்கு வர வேண்டும். இதேபோல், ஆசிரியர்களும் இருபிரிவாக பிரித்து சுழற்சி முறையில் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து 6 மாதத்திற்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், அவர்களுக்கான தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நேற்றே பல பள்ளிகளில் தூய்மை பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. 

No comments:

Post a Comment