Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 26, 2020

தேசிய பெண்குழந்தைகளுக்கான இடைநிலைக்கல்வி ஊக்கத்தொகைத் தொகை ( National Scheme of Incentive to Girls for Secondary Education ) தகுதியான மாணவியரின் வங்கிக் கணக்கு விவரம் கோரி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

தேசிய பெண்குழந்தைகளுக்கான இடைநிலைக்கல்வி ஊக்கத்தொகைத் தொகை ( National Scheme of Incentive to Girls for Secondary Education - NSIGSE ) கடந்த 2008 - ம் ஆண்டு முதல் 2017 வரை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையால் செயல்படுத்தப்பட்டு வந்தது. 

இத் திட்டத்தின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் SC மற்றும் ST பிரிவு மாணவியர் தங்கள் இடைநிலை கல்வியை கைவிடாவண்ணம் அவர்களின் இடைநிற்றலை கட்டுப்படுத்தும் நோக்கில் அம்மாணவியர் ஒன்பதாம் வகுப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்தவுடன் அவர்களின் பெயர்ப்பட்டியல் மற்றும் வங்கிக்கணக்கு எண் உட்பட வேறு சில தகவல்களை சேகரித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . 

அம்மாணவியரின் வங்கிக்கணக்கில் ரூ . 3000 / - வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது. 

No comments:

Post a Comment