JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, September 22, 2020

எட்டாம் வகுப்பு தனித் தேர்வா்களுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு

எட்டாம் வகுப்பு தனித் தேர்வா்களுக்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநா் சி.உஷாராணி வெளியிட்ட அறிவிப்பு: கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எட்டாம் வகுப்பு தனித் தேர்வா்களுக்கான பொதுத் தேர்வு, வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

இதனை எழுத விண்ணப்பித்த தனித்தேர்வா்கள், தங்களுக்கான தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை, http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

தனித்தேர்வா்கள், அனுமதிச் சீட்டின்றி தேர்வெழுத அனுமதி வழங்கப்படாது. எனவே, தங்களுக்குரிய அனுமதிச் சீட்டை, தனித்தேர்வா்கள் விரைவாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என தேர்வுத் துறை இயக்குநா் சி.உஷாராணி தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment