Friday, September 11, 2020

நீண்ட வருடங்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் உணவு பொருட்கள்!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

பொதுவாக நாம் உணவுப் பொருட்களை நீண்ட காலத்திற்கு கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைக்க, நம்முடைய அம்மா மற்றும் பாட்டியம்மா சொன்ன வழிமுறைகளையே பின்பற்றுகிறோம். 

ஆனால் சில உணவுகள் இயற்கையாகவே எந்தவித பாதுகாப்பும் தேவைப் படாமல் நீண்ட வருடங்கள் அதில் அடங்கியிருக்கும் சில பண்புகளால் எப்படி கெட்டுப் போகாமல் இருக்கிறது. 

இவை எல்லாமே இயற்கை மற்றும் அறிவியலின் விளையாட்டாகும். அந்தவகையில் பல ஆண்டுகள் வரையிலும் கெட்டுப் போகாமல் வைத்திருக்கக்கூடிய சில உணவுப் பொருள்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேன்

என்றென்றைக்குமான வாழ்நாளை கொண்ட ஒருபோதும் கெட்டுப் போகாத ஒரே உணவு தேனாகும். தேனை சேகரித்து தயாரிக்கும் ஒட்டுமொத்த அற்புதமான செயல்முறைக்காக நாம் இயற்கைக்கு நன்றி சொல்ல வேண்டும். தேன் மலர்களின் மகரந்தத் தேனுடன் தேனீக்களின் நொதிகள் கலந்து உருவாகிறது. இப்படி உருவாக்கப்படும் இந்த திரவத்தில் குறைந்த ஈரப்பதமும் அதிக அமிலத்தன்மையும் இருப்பதால் இது இயற்கையாகவே பாக்டீரியாக்களை விலக்கி வைக்கிறது.

சோயா சாஸ்

சுவையூட்டும் பொருட்களில் ஒன்றான சோயா சாஸ் நாட்படும் போது அதன் அசல் காரத்தன்மையை இழக்கக்கூடும். ஆனால் கெட்டுப் போகாது. சோயா சாஸில் அடங்கியுள்ள உப்புத்தன்மை உணவுகளைக் கெட்டுப் போகச் செய்யும் பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கிறது. அதை குளிர்ந்த இடத்தில் வைப்பது நல்லதென்று பரிந்துரைக்கப்படுகிறது.

உப்பு மற்றும் சர்க்கரை

உப்பு என்பது சோடியம் பைகார்பனேட் என்கிற வேதிப் பொருள் தானே ஒழிய வேறொன்றுமில்லை. இது பூமியின் மேல்பகுதியிலிருந்து வெட்டியெடுக்கப்படும் ஒருவித கனிமம் ஆகும். இது பெரும்பாலும் ஊறுகாய் போன்ற இதர உணவுப் பொருட்களை கெட்டுப் போகாமல் பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

நல்ல தரமான உப்பு 5 வருடங்கள் வரை கெட்டுப் போகாது என்று நம்பப்படுகிறது. சர்க்கரையின் விஷயத்திற்கு வரும்போது, ஈரப்பதமில்லாமல் காற்று புகாத டப்பாக்களில் பாதுகாத்து சேமித்து வைக்கும் போது அதன் அலமாரி வாழ்நாள் அதிகரிக்கிறது.

டிஸ்டில்ட் ஒயிட் வினிகர்

வெள்ளை வினிகரில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மை அதற்கு நீண்ட அலமாரி வாழ்நாளை அளிக்கிறது. உண்மையில் இதிலுள்ள அமில பண்புகளால் பிற உணவுகளை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்க பெரும்பாலும் வெள்ளை வினிகர் பயன்படுத்தப்படுகிறது.

வெள்ளை அரிசி

பழுப்பு அரிசி அதில் நிறைந்திருக்கும் அதிக அளவு எண்ணெய் தன்மையால் காலப்போக்கில் கெட்டுப் போகும். ஆனால் இது வெள்ளை அரிசி, வைல்ட் அர்போரியோ. பாஸ்மதி போன்ற அரிசி வகைகளுக்குப் பொருந்தாது. வெள்ளை அரிசி பல வருடங்களுக்கு கெட்டுப் போகாமல் நீடித்து இருக்கும்.

உலர்ந்த பீன்ஸ்

உலர்ந்த பீன்ஸை அதன் ஊட்டச்சத்துக்களை இழக்காமல் ஆண்டுக்கணக்கில் சேமித்து வைக்கலாம். இருந்தாலும், ஒரு வருடத்திற்கு பிறகு அது தன் ஈரத்தன்மையை இழந்து விடுவதால், சமைப்பதற்கு முன் தண்ணீரில் நீண்ட நேரம் ஊறவைக்க வேண்டும்.

நெய்

வீட்டில் தயாரிக்கும் பசு நெய் நீண்ட காலத்திற்கு கெடாமல் நிலைத்திருக்கும். அதை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. அடிப்படையில் நெய் என்பது சுத்திகரிக்கப்பட்ட உருக்கிய வெண்ணையே ஆகும். வெண்ணைய் பாலாடை அல்லது தயிரின் க்ரீமிலிருந்து தயாரிக்கப்பட்டு புகழ்பெற்ற சமையல் பொருளாகவும் சுவையூட்டியாகவும் பண்டைய காலம் முதலே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application