Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, September 25, 2020

விருப்பம் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லலாம் - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கு செல்ல மாணவர்களுக்கு விருப்பம் இருந்தால் செல்லலாம் என அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன என்பதும் ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் அனைவரும் அறிந்தவையே. அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளை திறக்க தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்தார். இதனால் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அரைகுறை கல்வியோடு எப்படி தேர்வுகளை எதிர் கொள்வார்கள் என விமர்சனங்கள் எழுந்தன.

இதனையடுத்து நேற்று நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுதும் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிக்கு வரலாம் என்றும் ஆசிரியர்கள் குழுக்களாக பிரிந்து பாடங்களை எடுக்கலாம் என்றும் அரசு அறிவித்தது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் விருப்பம் இருந்தால் மட்டும் பள்ளிக்கு செல்லலாம் என்றும் பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை பள்ளிக்கு சென்று தெளிவுப்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment