Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 9, 2020

அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த தயார் - தமிழக அரசு

கலை அறிவியல் மற்றும் பொறியியல் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் முந்தைய ஆண்டுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் என அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில் பொறியியல் படிப்பில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அண்ணாப் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு உட்பட்டே அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கியதாக தமிழக அரசு தெரிவித்தது.

இந்த நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய விவகாரம் தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் தலைவர் தமிழக உயர்கல்வித்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது தமிழக அரசு தரப்பில் அரியர் மாணவர்களுக்கு தேர்வை நடத்த தமிழக அரசு தயாராக இல்லை என்று வெளியான தகவல் தவறானது என aicte யிடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பொறியியல் மாணவர்களுக்கு அரியர் தேர்வு நடத்த வேண்டும் என்று தமிழக அரசிடம் Aicte திட்டவட்டமாக கூறியுள்ளது.

இதனால் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய தமிழக அரசின் முடிவு திரும்பப்பெறக்கூடும் என்கிற கருத்தை கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர்.

No comments:

Post a Comment