Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, September 30, 2020

ஓய்வூதியத்தில் புதிய நடைமுறை ஒய்வூதியர் சங்கம் கண்டனம்

தமிழ்நாடு அரசு IFHRMS புதிய நடைமுறைபடுத்துதலை அனைத்து துறை ஒய்வூதியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட துணைத்தலைவர் கருணாகரன் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாடு அரசு IFHRMS என்ற நடைமுறையில், விப்ரோ என்ற தனியார் நிறுவனம் மூலம், அரசு அலுவலர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

அரசு அலுவலர்களுக்கு கடந்த மாதத்திலிருந்து இந்த முறையில் சம்பளம் வழங்கினர்.ஆனால் கடந்த மாதம் 100 சதவீதமும் முழுமையாக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. 

கருவூல அலுவலர் மற்றும் கருவூல கூடுதல் அலுவலர் இரவு பகலாக முயன்றும் விப்ரோ பணியாளர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் செயல்படுத்த முடியவில்லை. இதனால் பலர் ஊதியம் பெறவில்லை.

இந்நிலையில் ஓய்வூதியர்களுக்கும் புதிய நடைமுறை மூலம் ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்கின்றனர். இதற்கு தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. 

இதை கண்டித்து நாளை 1ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment