Subscribe Us

Wednesday, September 30, 2020

இன்று முதல் மூன்றாண்டு LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மூன்றாண்டு எல்எல்பி சட்டப்படிப்புக்கு, புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்கலைக்கழகப் பதிவாளா் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்திலுள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் மூன்றாண்டு எல்எல்பி சட்டப்படிப்புக்கும், தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீா்மிகு சட்டப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் மூன்றாண்டு எல்எல்பி (ஹானா்ஸ்) சட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள், புதன்கிழமை (செப். 30) முதல் வழங்கப்படும். இந்த விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து, அக்.28-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம்.

இதே போல், தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை சட்ட மேற்படிப்புகளுக்கான எல்எல்எம் சோக்கை விண்ணப்பங்கள், அக்.7-ஆம் தேதி முதல் வழங்கப்படும். 

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, நவ. 4-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள், www.tndalu.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளம் வாயிலாகவும், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் நேரடியாகவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed