தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் பொறியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார்.
பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 1,31,436 மாணவர்களுக்கும் தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டன. திருத்தி அமைக்கப்பட்ட புதிய கலந்தாய்வு பட்டியலையும் அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.
199.67 கட் ஆப் மதிப்பெண்களுடன் சஸ்மிதா என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். https://tneaonline.org இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய கட்-ஆப் மதிப்பெண்கள் அறியலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பழகன், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் தமிழக அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
பல்கலைகழகம் இரண்டாக பிரிக்கப்பட்டாலும் இரண்டிலும் அண்ணா பெயர் கண்டிப்பாக இருக்கும், அரியர் தேர்வுக்கு பணம் செலுத்தாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க முடியாது.
அவர்கள் அடுத்த செமஸ்டரில் உரிய தேர்வு கட்டணத்தை செலுத்தி தேர்வினை எழுத வேண்டும்" என தெரிவித்தார்.
Tuesday, September 29, 2020
Home
கல்விச்செய்திகள்
அரியர் தேர்வுக்கு பணம் செலுத்தாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பா?- அமைச்சர் அன்பழகன்
அரியர் தேர்வுக்கு பணம் செலுத்தாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பா?- அமைச்சர் அன்பழகன்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment