Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 13, 2020

பிளஸ் 1 , பிளஸ் 2 முடித்தவர்களுக்கு நாளை மார்க்  ஷீட்


பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர் களுக்கு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டும், ஏற்கனவே வழங்கப்பட்டது. 

இதையடுத்து, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளதால், திருத்தப்பட்ட மதிப்பெண்ணுடன் கூடிய, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், நாளை முதல் வழங்கப்பட உள்ளன.மாணவர்கள் தங்கள் பள்ளியிலும், தனித்தேர்வர்கள், தங்கள் தேர்வு மையத்திலும் சான்றிதழ்களை பெறலாம். அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், தனித்தனியே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஒரே மதிப்பெண் பட்டியல் மட்டும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment