Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 12, 2020

2017 TO 2020 - கல்வி உதவித்தொகை அறிவிப்பு.

தமிழக அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கல்விக்கட்டணம் செலுத்தி கீழ்கண்ட பட்டியல் வகைபாட்டின் அடிப்படையில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு / தொழில்நுட்ப பட்டயப் படிப்ப பயிலும் மாணவ , மாணவியர்களிடமிருந்து கீழ்கண்ட அறக்கட்டளைகள் மூலமாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்காக கீழ்கண்ட பிரிவினைச் சார்ந்த நபர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.

விண்ணப்பதாரரின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ .2,00,000 - ( ரூபாய் இரண்டு லட்சம் மட்டும் ) மிகப்படாது இருத்தல் வேண்டும். விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அனைத்து காலங்களையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது விண்ணப்பபடிவம் பெற ஒரு முழு வெள்ளைத்தாளில் மாணவ , மாணவியர் தங்கள் பெயர் , பயிலும் / பயின்ற வருடம் , கல்லூரியின் பெயர் , ஜாதியின் விவரம் அடங்கிய வேண்டுகோள் மனுவுடன் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

தபாலில் பெற ரூபாய் 10 -க்கான அஞ்சல் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட நீள உறை இணைத்து தபால் மூலம் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைத்தால் விண்ணப்பம் அனுப்பி வைக்கப்படும் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறும் கடைசி நாள் 30.10.2020 மாலை 5.00 மணி . குறைபாடுள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை பெற தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். 

அதிகமான மாணவர்கள் மூன்று கல்வி ஆண்டுகளுக்காக உதவித்தொகைக்கு தேர்வாகும் நிலையில் மற்ற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏதேனும் ஒரு கல்வி ஆண்டிற்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதைப்பொறுத்து தமிழ்நாடு அரசு பேராட்சியர் மற்றும் பொறுப்பு சொத்தாட்சியா முடிவே இறுதியாகும்.

No comments:

Post a Comment