Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 8, 2020

கல்லூரிகளில் சுழற்சி வகுப்புகள் நடத்தும் வகையில் 4,084 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க அனுமதி: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் சுழற்சி வகுப்புகள் நடத்துவதற்கு வசதியாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் 4,084 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. 

உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணை: 

தமிழ்நாடு அரசுக் கல்லூரி விரிவுரையாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் அரசுக் கல்லூரிகளில் 2ம் சுழற்சி முறையின் கீழ் பாடங்களை நடத்த 1661 கவுரவ விரிவுரையாளர்களை மாதம் ரூ15 ஆயிரம் தொகுப்பு ஊதியம் என்ற அடிப்படையில் நியமித்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தை அரசு பரிசீலித்து 59 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2ம் சுழற்சி முறையில் பாடம் நடத்த 1661 விரிவுரையாளர்களை ஏப்ரல் 2020, ஜூன் 2020 முதல் அக்டோபர் 2020 வரை 6 மாதங்களுக்கு தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் பணியமர்த்திக் கொள்ள அரசு ஆணையிடுகிறது. 

அதே போல, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி முறை 1ன் கீழ் காலியாக உள்ள இடங்களில் 1883 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள கடந்த 2018-2019ம் ஆ ண்டில் அனுமதி அளிக்கப்பட்டது. 

பின்னர் கூடுதலாக 540 விரிவுரையாளர்கள் நியமிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து கல்லூரிக் கல்வி இயக்குநர் மூலம் அரசுக்கு எழுதிய கடிதத்தில், 2019-2020ம் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே 3,443 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்து, அந்த இடங்களை நிரப்ப கோரியிருந்தார்.

அந்த கடிதத்தை கவனமுடன் பரிசீலத்த அரசு, 2020-2021ம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2423 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா நேற்று வெளியிட்டுள்ளார். 

இதன்படி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி முறை1 மற்றும் சுழற்சி முறை2 ஆகியவற்றில் பாடங்களை நடந்த 4084 கவுரவ விரிவுரையாளர்களை நியமித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

No comments:

Post a Comment