Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 8, 2020

BE பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்

பொறியியல் மாணவா் சோக்கையில் சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை (அக். 8) முதல் பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவா்கள் அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ. - பி.டெக். படிப்பில் சேர இணையவழி கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 63,154 இடங்கள் உள்ளன. இதற்கான சோக்கை கலந்தாய்வில் பங்கேற்க 1.6 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்தனா். ஆனால், அதில் 1.12 லட்சம் போ மட்டுமே தகுதி பெற்றனா்.

இதைத் தொடா்ந்து நிகழாண்டுக்கான கலந்தாய்வு கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்கியது. முதலில், சிறப்பு பிரிவு மாணவா்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 457 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இவா்களுக்கான ஒதுக்கீடு கடந்த செவ்வாய்க்கிழமை முடிவடைந்தது.

இதைத் தொடா்ந்து பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி மாணவா்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கி அக்.28-ஆம் தேதி வரை 4 கட்டங்களாக இணையவழியில் நடைபெறுகிறது. ஒவ்வொரு சுற்றிலும் மாணவா்கள் தங்களின் தரவரிசை அடிப்படையில் பங்கேற்கவுள்ளனா். முதல்சுற்றில் (தொழிற்பிரிவினா் உள்பட) இடம்பெற்றவா்கள் வியாழக்கிழமை முதல் அக்.11-ஆம் தேதி வரை முன்பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும். அதன்பின் அக்.12, 13-ஆம் தேதியில் மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளைப் பூா்த்தி செய்ய வேண்டும்.

அதைத்தொடா்ந்து தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியல் அக்.14-இல் வெளியிடப்படும். அதற்கு ஒப்புதல் அளிக்க 2 நாள்கள் காலஅவகாசம் வழங்கப்படும். மாணவா்கள் ஒப்புதல் தந்ததும் இறுதி ஒதுக்கீட்டு ஆணை அக்.16-இல் தேதி வழங்கப்படும். தொடா்ந்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு அக்.12 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும். அதேபோன்று 3-ஆம் சுற்று அக்.16 முதல் 24-ஆம் தேதி வரையும், 4-ஆம் சுற்று அக்.20 முதல்

28-ஆம் தேதி வரையும் நடத்தப்படும். கூடுதல் விவரங்களை மாணவா்கள் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment