Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 5, 2020

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - 6 ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கு வாய்ப்பு.


தமிழகத்தில்கொரோனா. காரணமாக அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கை அதிகரித்துள்ளதால்‌, 6. ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஆசிரியர்‌ நியமனம்‌ நடைபெற வாய்ப்புள்ளது. 

அதேசமயம்‌, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்‌ என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில்‌ நடப்பாண்டு 'ககொரோனா ஏற்படுத்திய தாக்கம்‌, பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்‌ ஒருபகுதியாக, எப்போதும்‌ இல்லாத வகையில்‌ நடப்‌பாண்டு அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்‌ சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ககொரோனா ஊரடங்கால்‌ ஏற்பட்ட பொருளாதார நலிவுநிலை. பெற்றோர்‌களை தனியார்‌ பள்ளிகள்‌ பக்கம்‌ செல்லவிடாமல்‌ தடுத்துவிட்டன. 

'இதனால்‌. அரசுப்பள்ளிகளில்‌ உள்ள ஆங்கில வழிக்கல்வியில்‌ ஏராளமான பெற்றோர்‌ தங்களது குழந்தைகளை சேர்த்துள்ளனர்‌. அதேசமயம்‌, அரசுப்பள்ளிகளில்‌ தற்போது கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு சிறப்‌பான கற்றல்‌, கற்பித்தல்‌ பணிகளை மேற்கொண்டு, அவர்களை மீண்டும்‌ தனியார்‌ பள்ளிக்கு செல்லாதவாறு பார்த்துக்கொள்வது அரசின்‌ கட்டாயமாகும்‌. தமிழகத்தில்‌ கடந்த 6 ஆண்டுகளாக ஆசிரியர்‌ நியமனம்‌ இல்லாத நிலையில்‌, தற்போது கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களின்‌ நலனை கருத்தில்‌ கொண்டு, புதிதாக ஆசிரியர்கள்‌ நியமிக்கப்படுவார்கள்‌ என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மேலும்‌. மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த (வேண்டும்‌ என்ற கோரிக்கை விடுக்‌கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரி யர்கள்‌ கூறியதாவது: தமிழகத்தில்‌ உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்‌நிலைப்‌ பள்ளிகளில்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கு தகுந்தவாறு, ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ தோற்றுவிக்கப்‌பட்டு புதிய நியமனங்கள்‌ நடைபெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக முதுகலை ஆசிரியர்கள்‌ அவ்வப்போது நியமிக்கப்படுகிறார்களே தவிர, கடந்த 2014ம்‌ ஆண்டுக்கு பிறகு புதிதாக இடைநிலை ஆசிரியர்களோ, பட்டதாரி ஆசிரியர்களோ நியமிக்கப்படவில்லை. 

No comments:

Post a Comment