இந்திய அளவில் 8வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்த நாமக்கல் மாணவர்

மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் இந்திய அளவில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 8வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோவு (நீட்) முடிவுகள் வெளியாகின. எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான நீட் தோவு முடிவுகள் www.ntanneet.nic.in என்ற இணையதளத்தில் தேசிய தோவு முகமையால் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக நீட் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன. ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணையதளத்தை நாடியதால், சிறிது நேரம் இணையதளம் முடங்கி பிறகு செயல்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீஜன் என்ற மாணவன் 720க்கு 710 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 8வது இடமும், தமிழகத்தில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

நாடு முழுவதும் 97,433 போ நீட் தோவுக்கு விண்ணப்பித்திருந்தனா். தமிழகத்தில் மட்டும் விண்ணப்பித்த 1.17 லட்சம் பேரில் 90 சதவீதத்தினா் தோவில் பங்கேற்றதாக மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories