Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, October 4, 2020

BE - கவுன்சிலிங் விருப்ப பதிவு எப்படி நடைபெறுகிறது?

தமிழக இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஆன்லைன் முறையில் நடத்தப் படுகிறது. 1.12 லட்சம் மாணவர்களுக்கு, செப்., 28ல், தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு, ஆன்லைன் கவுன்சிலிங் நேற்று துவங்கியது. விளையாட்டு பிரிவில், 1,409 பேர்; முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள், 855 பேர்; மாற்றுத்திறனாளிகள், 149 பேர் பங்கேற்கின்றனர்.

கல்லுாரிகளின் காலியிடங்கள் பட்டியல், மாணவர்களுக்கு காட்டப்படும். இந்த பட்டியலில், தங்களுக்கு விருப்ப மான கல்லுாரிகளை, நாளையும், நாளை மறுநாளும் பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகளை, வரிசையாக பதிவு செய்ய வேண்டும்.

மிகவும் விருப்பமான கல்லுாரிகளை முன்வரிசையிலும், அடுத்தடுத்த கல்லுாரிகளை பின் வரிசையிலும் பதிவு செய்ய வேண்டும். எத்தனை கல்லுாரிகளை வேண்டுமானாலும் வரிசைப்படுத்தலாம்.

விருப்ப பதிவு எப்படி?

மாணவர்கள் வரிசைப்படுத்திய கல்லுாரிகளுக்கு, அவர்களின் தரவரிசைப்படி, இடங்களை கணினியே ஒதுக்கீடு செய்யும். மிகவும் விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாடப் பிரிவுகளை, வரிசையில் கீழே பதிவு செய்து விட்டு, வேறு கல்லுாரிகளை முதலில் பதிவு செய்தால், தரவரிசையில் வரும்போது, விருப்பமான கல்லுாரிகள் கிடைக்காத நிலை ஏற்படும்.

எனவே, மாணவர்கள் முதலில் தங்களுக்கு எது வேண்டும், அது இல்லாவிட்டால் எது என்ற அடிப்படையில், கல்லுாரி மற்றும் பாடப் பிரிவை பதிவு செய்ய வேண்டும் என, இன்ஜி., கவுன்சிலிங் குழுவினர் தெரிவித்தனர். நாளை மறுதினம் மாலை, 6:00 மணிக்குள், விருப்ப கல்லுாரிகளை பதிவு செய்து விட வேண்டும். வரும், 5ம் தேதி, மாணவர்களின் தரவரிசைப் படியான இடங்கள் ஒதுக்கப்பட்டு, உத்தேச ஒதுக்கீடு பட்டியல் வழங்கப்படும்.அதை, அன்று இரவு, 7:00 மணிக்குள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தொடர்ந்து, மாணவர்களின் உறுதி செய்த நிலைக்கு ஏற்ப, 6ம் தேதி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு ஆணை வழங்கப்படும் என, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி அறிவித்துள்ளது.

படங்களுடன் வெளியிடப்படுமா?

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கட்டணம் செலுத்துவது முதல், விருப்ப பதிவு செய்வது, அதை உறுதி செய்வது போன்ற முறைகளை, இணையதளத்தில் உரிய பட விளக்கங்களுடன் வெளியிட வேண்டும் என, மாணவர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர். விருப்ப பதிவில் எத்தனை கல்லுாரிகள் இடம் பெறலாம்; உத்தேச ஒதுக்கீட்டில், எத்தனை கல்லுாரிகள் மற்றும் பாடப் பிரிவுகள் இடம் பெறும்; அதை உறுதி செய்வது, வேறு விருப்பங்களை பதிவு செய்வது குறித்த விபரங்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment