Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 14, 2020

முதுகலை படிப்பு சான்றிதழ்: நாளை முதல் பதிவேற்றலாம்


அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் நாளை முதல் இணைய வழியில் சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2020-21ம் கல்வியாண்டுக்கான முதுகலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த, 10ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. 

வரும், 20ம் தேதி வரை www.tngasapg.in மற்றும் www.tngasapg.org ஆகிய இணைய முகவரிகளில் விண்ணப்ப பதிவு செய்யலாம்.ஒரு கல்லுாரிக்கு விண்ணப்ப பதிவு செய்ய, பதிவு கட்டணம், 2 ரூபாய், விண்ணப்ப கட்டணம், 58 என மொத்தம், 60 ரூபாய் செலுத்த வேண்டும். 

எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் பதிவு கட்டணம், 2 ரூபாய் மட்டும் செலுத்தலாம். மேலும், விண்ணப்ப பதிவு செய்யும் மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை நாளை (15ம் தேதி) முதல், 20ம் தேதி வரை www.tngasapg.in என்ற இணையதளத்திலுள்ள அட்டவணைப்படி பதிவேற்றம் செய்ய வேண்டும்.இதுதொடர்பான கூடுதல் விபரங்கள் குறிப்பிட்ட இணையதள முகவரிகளில் கொடுக்கப்பட்டுள்ளன. 

மாணவர்கள் தங்களது சந்தேகங்களை care@tngasapg.org மற்றும் tndceoffice@gmail.com என்ற இமெயில் முகவரிகளில் தொடர்பு கொண்டு தேவையான வழிகாட்டுதல்களை பெறலாம் என, உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment