JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில், 'டிப்ளமா இன்ஜினியரிங்' சேர விரும்பும் மாணவியருக்கு, இரண்டாம் கட்ட , 'கவுன்சிலிங்' நடக்க உள்ளது. சென்னை, தரமணியில் இயங்கி வரும், டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் உட்பட, எட்டு பாட பிரிவுகளில், டிப்ளமா இன்ஜினியரிங் பயிற்றுவிக்கப்படுகிறது.
இக்கல்லுாரியில், 2020 - -21 கல்வியாண்டுக்கான, முதலாமாண்டு மாணவியர் சேர்க்கை, முதல் கட்ட கவுன்சிலிங் நிறைவு பெற்றது.காலி இடங்களுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்க உள்ளது.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, டிப்ளமா இன்ஜினியரிங் பயில விரும்பும் மாணவியர், நாளைக்குள், விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும் என, கல்லுாரி முதல்வர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
மேலும் விபரங்களுக்கு, 044 -- 2254 2013 என்ற தொலைபேசி எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.'கமர்ஷியல் பிராக்டீஸ்'தரமணியில் உள்ள, மாநில வணிகக் கல்வி பயிலகம், தொழில்நுட்ப கல்வி துறையின் கீழ் இயங்கும், அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில், 'கமர்ஷியல் பிராக்டீஸ்' பாடப்பிரிவு பயிற்றுவிக்கிறது.
இக்கல்லுாரியில், 2020 - -21ம் கல்வியாண்டுக்கான, முதலாம் ஆண்டு மாணவ - மாணவியர் சேர்க்கையில், பல இடங்கள் காலியாக உள்ளதால், இரண்டாம் கட்ட துணை கவுன்சிலிங் மூலம், காலியிடங்களை நிரப்ப உள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, வணிகக் கல்விப் பயிலகம் பாலிடெக்னிக் கல்லுாரியில், 'டிப்ளமா கமர்ஷியல் பிராக்டீஸ்' பாட பிரிவில் சேர விரும்பும் மாணவ - மாணவியர், அரசின் விதிகளுக்குட்பட்டு, இரண்டாம் கட்ட துணை கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.
பட்டியல் இன மாணவ - மாணவியர் ஜாதி சான்றிதழ் நகல் சமர்ப்பித்து, விண்ணப்பங்களை இலவசமாக பெற்று கொள்ளலாம்.இரண்டாம் கட்ட துணை கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்புவோர், நாளைக்குள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, கல்லுாரி முதல்வர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment