JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, October 2, 2020

தருமபுரியில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்

தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு பெண் விடுதலை கட்சி நிறுவன தலைவர் சபரிமாலா தலைமை வகித்து பேசினார். இப்போராட்டத்தில் கடந்த 2013-இல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதில் தருமபுரி, கிருஷ்ணகிரி,,சேலம் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து அனுமதி இன்றி போராட்டத்தில் பங்கேற்ற, பெண் விடுதலை கட்சி நிறுவன தலைவர் சபரிமாலா உள்ளிட்ட 300 பேரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment