Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 14, 2020

பள்ளிகள் நிச்சயம் திறக்கப்படாது செங்கோட்டையன் பளிச்!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது முடிவு எடுக்க முடியாது என அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு நிலையில் தமிழகத்தில் எப்போது பள்ளிக்கள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது,

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது முடிவு எடுக்க முடியாது. ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் கொரோனா தாக்கம் அதிகரித்தது. எனவே தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பின்னர் தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment