Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 5, 2020

வாய்வு தொல்லையை போக்க உதவும் கற்பூரவல்லி மூலிகை சூப்


அனைவரும் வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறோம். இதற்கான தீர்வுதான் இந்த கற்பூரவல்லி மூலிகை சூப். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை:

கற்பூரவல்லி இலை - 10

ஓமம் - 2 ஸ்பூன்

சீரகம் - 2 ஸ்பூன்

தனியா - 2 ஸ்பூன்

மிளகு - 4

இஞ்சி - 1 துண்டு,

பூண்டு - 4 பல்

உப்பு - தேவைக்கு,

பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

வெற்றிலை - 4

நெய் - 2 ஸ்பூன்

செய்முறை: கற்பூரவல்லி இலையைநன்கு கழுவவும். கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை சேர்த்து வதக்கவும்.

மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் சேர்த்து 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். அருமையாக மூலிகை சூப் ரெடி.

No comments:

Post a Comment