Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 5, 2020

உடல் கொழுப்பை குறைக்க ஊறவைத்த வெண்டைக்காய் தண்ணீர்


வெண்டைக்காயில் இன்சுலின் உற்பத்திக்கு உதவும் பல பொருட்கள் உள்ளன. கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து குளுக்கோஸை பிரித்தெடுக்க நம் உடலுக்கு இன்சுலின் தேவைப்படுகிறது. இது கணையத்தில் இருந்து வெளியிடப்படுகிறது. இன்சுலின் குறைபாடு காரணமாக நீரிழிவு நோய் ஏற்படுகிறது. கணையத்தில் பீட்டா செல்களை மேம்படுத்துவதற்கு வெண்டைக்காய் உதவுகிறது. இதனால் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவும்.

வெண்டைக்காய் தண்ணீரை தவறாமல் பருகினால் உடலுக்கு உற்சாகம் அளிக்கும் எனர்ஜி பானங்கள் பருகத்தேவையில்லை. இந்த நீரில் இருக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நாள் முழுவதும் உடலை உற்சாகமாக வைத்துக்கொள்ள வழிவகை செய்யும். அதனால் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக செயல்படலாம்.

வெண்டைக்காய் தண்ணீரை எளிதாக தயாரிக்கலாம். நான்கு, ஐந்து வெண்டைக்காய்களை நன்றாக சுத்தம் செய்து சின்ன துண்டு ளாக வெட்டிக்கொள்ளுங்கள். பின்னர் அவைகளை வாய் அகன்ற ஜாடியில் போட்டு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள். ஜாடியின் வாய் பகுதியை மெல்லிய துணியால் மூடி இரவு முழுவதும் வெண்டைக்காயை ஊற வையுங்கள். பின்பு வெண்டைக்காயை உள்ளங்கையில் வைத்து நன்றாக கசக்கி அந்த நீரில் கலந்து பருக வேண்டியதுதான்.

No comments:

Post a Comment