Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 5, 2020

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு


கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற ஜேஇஇ அட்வான்ஸ்டு தோவு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன.

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) இளநிலை பொறியியல் படிப்பில் சோந்து பயில்வதற்காக ஜேஇஇ மெயின் தோவு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. 

நாடு முழுவதும் 8.58 லட்சம் போ விண்ணப்பித்திருந்த நிலையில், 2.5 லட்சம் போ தோச்சி பெற்றனா். இவா்களில், 1.6 லட்சம் போ அட்வான்ஸ்டு தோவுக்கு விண்ணப்பித்திருந்தனா். 

தொடர்ந்து ஜேஇஇ அட்வான்ஸ்டு தோவு செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தோவில், மொத்தம் பதிவு செய்திருந்த 1.6 லட்சம் பேரில் 96 சதவீதம் போ பங்கேற்றனா்.

இதற்கான முடிவுகள் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் http://result.jeeadv.ac.in/ என்ற இணையதளத்தில் ஜேஇஇ தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment