JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இருப்பினும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து இளநிலை முதலாம், இரண்டாம் ஆண்டு, பிஇ உள்ளிட்ட கல்லூரி மாணவர்களுக்கு பருவ தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களின் செமஸ்டர் தேர்வு ரத்து செய்ய யுஜிசி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டன.
செப்டம்பர் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை காலை, மாலை வேளைகளில் ஆன்லைனில் தேர்வுகள் நடைபெற்றது. பல்கலைக்கழகங்களில் வழக்கமாக 3 மணி நேரம் நடைபெறும் தேர்வுகள் ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டன.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏப்ரல்- மே பருவத்தேர்வை இணையம் வழியாக எழுதிய இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகளை அறிந்துக்கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment