Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, October 27, 2020

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுவையில் ' பி ' மற்றும் ' சி ' பிரிவு அரசு ஊழியர்க ளுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து புதுவை முதல்வர் நாராயணசாமி அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது : தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி மாநில அரசில் பணிபுரியும் ' பி ' மற்றும் ' சி ' பிரிவு ஊழியர்களுக்கு 2019-20 - ஆம் ஆண்டுக்கான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க நிதித் துறைக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார் . 

அதனைத் தொடர்ந்து , மாநில அரசில் பணிபுரியும் உற்பத்தி சம்பந்தப்பட்ட போனஸ் பெறாத பிரிவு ' பி ' ( அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரிகள் தவிர்த்து ) மற் றும் பிரிவு ' சி ' ஊழியர்களுக்கும் , முழு நேர தற்காலிக ஊழியர்கள் 2019-20 - ம் ஆண்டுக்கான போனஸ் வழங்குவதற்கான கோப்புக்கு முதல்வர் ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார் . 

இதன் மூலம் ' பி ' , மற்றும் ' சி ' பிரிவு ஊழியர்களுக்கு போனஸாக ரூ .6,908 - ம் , முழு நேர தற்காலிக ஊழியர்களுக்கு ரூ .1200 - ம் வழங் கப்படும் . இதனால் , அரசு ஊழியர்கள் மற்றும் முழு நேர தற்காலிக ஊழியர்கள் சுமார் 26,000 ஊழியர்கள் பலனடைவர் . இதனால் புதுவை அரசுக்கு சுமார் ரூ .18 கோடி கூடுதலாகச் செலவாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment