JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவையை பயன்படுத்துவது கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக , தொலைத்தொடர்பு துறை சார்பில் அனைத்து அமைச்சகங்களுக்கும் உத்தரவு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், அமைச்சகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தரைவழி இணைப்பு தொலைபேசி, இணையதள இணைப்பு- பிராட்பேண்ட் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பிஎஸ்என்எல் மற்றும் என்டிஎன்எல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களின் சேவையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.பெரும் நஷ்டத்தில் சிக்கி தவித்து வரும், பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனத்திற்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment