Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, October 15, 2020

'குப்பைமேனி இலையின் மருத்துவ குணங்கள்


குப்பைமேனி இலைகளில் அதிகளவில் மருத்துவ குணங்கள் இருப்பதால் தொடர்ந்து குப்பைமேனி இலைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

குப்பைமேனி இலைகளை அரைத்து சாறு எடுத்தால் அதில் அரை டீஸ்பூன் அளவிற்கு மட்டும் எடுத்து அதனுடன் உப்பு சேர்த்து கலந்து சாப்பிட்டால் நெஞ்சு சளி சரியாகும். அதேப்போல் குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் வாந்தியுடன் சளியும் வெளியேறும். அதனால் வாரம் இருமுறை இதை கொடுத்து வரலாம்.

சுண்ணாம்பு மற்றும் குப்பைமேனி சேர்த்து கலந்து வீக்கம் உள்ள இடத்தில் பூசினால் வீக்கம் குறையும். மேலும் விஷக்கடி ஏற்பட்டால் இதை தடவினால் விஷம் குறையும். 

விளக்கெண்ணெயில் குப்பைமேனி இலைகளை சேர்த்து வதக்கி மூட்டுகள் மீது பற்று போட்டு வந்தால் வலி குறையும்.

சர்க்கரை நோயாளிகள் குப்பைமேனி இலைச்சாற்றை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.

கோரைக்கிழங்கை நன்கு உலரவைத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும். பிறகு மஞ்சள் தூள், குப்பை மேனி இலை பொடி மற்றும் கோரை கிழங்கு பொடி ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை தடவி வர முகத்தில் தேவையில்லாமல் முடி வளர்வதை தடுக்கும்.

No comments:

Post a Comment