Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 5, 2020

ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம் மாற்றம் செய்ய அரசு மறுப்பு

'ராணுவத்தினருக்கான, ஒரு பதவி, ஒரே ஓய்வூதிய திட்டம் அரசின் கொள்கை முடிவு; இதில் திருத்தம் செய்வது தொடர்பாக பிரச்னையில் நீதிமன்றம் தலையிட முடியாது' என, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராணுவத்தினருக்கான, ஒரு பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. 'இந்த திட்டத்தின் கீழ், ஓய்வூதியம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஆண்டுதோறும் மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும். 

2013ம் ஆண்டை அடிப்படையாக வைத்து ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை, 2014ம் ஆண்டை அடிப்படையாக வைத்து மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்' என, முன்னாள் வீரர்கள் இயக்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது....

இந்நிலையில், ராணுவ அமைச்சகத்தின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:ஒரு குறிப்பிட்ட பணி அந்தஸ்துள்ளவர்கள், ஒரு குறிப்பிட்ட ஆண்டில் எப்போது ஓய்வு பெற்றாலும், ஒரே மாதிரியான ஓய்வூதியம் அளிக்கும் இந்த திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, அதன் பிறகு நடைமுறைக்கு வந்தது.

இந்த திட்டத்தின் கீழ், மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு, 7,123 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகிறது. பொருளாதார சூழ்நிலைகள் உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்தே, இந்த நடைமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அதில் திருத்தம் செய்யும்படி கோர முடியாது. அதில் நீதிமன்றங்களும் தலையிட முடியாது.இவ்வாறு, பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment