Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 21, 2020

ரத்த அழுத்தம் சீராக வைக்கும் முத்திரை

இன்றைய காலத்தில் அவசர வாழ்க்கைமுறையாலும், மிகுந்த மன அழுத்தத்தாலும் 25 வயதை தொடும் போதே எல்லோரும் ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்பட்டு, நெடுங்காலம் அவதிப்படும் ஒரு சூழ் நிலை உருவாகிறது. அப்படிப்பட்ட ஒரு பாதிப்பு தான் ரத்த அழுத்தம். 

இதில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் என்று இருவகை இருந்தாலும், அவை இரண்டையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு முத்திரை இதோ. 
முத்திரை செய்யும் முறை: 

முதலில் உங்கள் முதுகும், கழுத்தும் நேராக இருக்கும் வகையில் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளவேண்டும். 

பிறகு உங்கள் இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மீது வைத்துக் கொள்ளவேண்டும். 

இப்போது உங்கள் இருக்கைகளிலும் உள்ள நடுவிரல்களையும், மோதிர விரல்களையும் உள்ளங்கைக்குள் மேலே உள்ள படத்தில் காட்டியவாறு வைத்துக்கொள்ள வேண்டும். 

உங்கள் ஆட்காட்டி விரல்கள், சுண்டு விரல்கள், கட்டை விரல்கள் நேராக நீட்டிக்கொண்டிருக்க வேண்டும். 

இப்போது உங்கள் கண்களை மூடிக்கொண்டு, மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளுக்கு சுவாசிக்க வேண்டும். பின்பு மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். இதே முறையில் இந்த பயிற்சியை தினமும் காலையிலும், மாலையிலும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

பலன்கள்: 

ரத்த அழுத்தம் உடனடியாகக் கட்டுக்குள் வந்துவிடும். உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை இருக்கும்போது, தலைசுற்றல், படபடப்பு வரும் போது இந்த முத்திரையை செய்யலாம். 

வெயிலில் அலையும்போது, அதிகப்படியான மனஉளைச்சல், அதிகப் படபடப்பு, அதிகமாக பி.பி உயர்ந்துவிட்டது என உணரும் சமயங்களில், 10 நிமிடங்கள் இந்த முத்திரையை செய்யலாம்.

இம்முத்திரையை தொடர்ந்து செய்வதால் எந்த வகையான ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும். தலை கிறுகிறுப்பு நீங்கும். 

இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக்கும். 

யிறு சம்பந்தமான பிரச்சனைகளும் நீங்கும். 

குறிப்பு: இம்முத்திரையை செய்வதால் ரத்த அழுத்ததிற்கான மாத்திரை, மருந்துகளை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் நிறுத்தக்கூடாது.

No comments:

Post a Comment