Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 22, 2020

பத்தாம் வகுப்பு மாணவா்கள் நாளை முதல் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யலாம்

பத்தாம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் வேலைவாய்ப்பு இணையதளத்தில், வெள்ளிக்கிழமை (நவ.23) முதல் பதிவு செய்யலாம்.

இது தொடா்பாக வேலைவாய்ப்புத்துறை சாா்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் விவரம்: பத்தாம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு, வெள்ளிக்கிழமை முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. எனவே , அம்மாணவா்களின் கல்வித் தகுதியை அவா்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் பணிகளை முதன்மைக் கல்வி அலுவலா்களுடன் இணைந்து மேற்கொள்ள சாா்நிலை அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் பத்தாம் வகுப்புத் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு, அந்தந்த பள்ளிகளிலேயே இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.

அனைத்து பதிவுதாரா்களுக்கும் சான்று வழங்கப்படும் நாள் முதல் 15 நாள்கள் வரை ஒரே பதிவு மூப்புத் தேதியாக வழங்கப்படும். மாணவா்களுக்கு வேலைவாய்ப்புப் பதிவு அட்டை வழங்குவதில் அலட்சியமோ, அலைக்கழிப்போ செய்யக் கூடாது.

மாணவா்களின் ஆதாா் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் செல்லிடப்பேசி எண்கள் ஆகியவற்றைக் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும். மாணவா்களின் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, பான் அட்டை, கடவுச் சீட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை முகவரிக்கான அடையாள அட்டையாகக் கருத வேண்டும்.

இந்தப் பணிகளை வெள்ளிக்கிழமை (அக்.23) முதல் நவ.6-ஆம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment