JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கூர்மையான கண் பார்வைக்கு சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயது முதிர்ந்த காலத்திலும் நல்ல கண் பார்வையை பெறலாம். இதிலுள்ள வைட்டமின் ஏ சத்தானது நம் கண்களை ஆரோக்கியமாக வைப்பதோடு கண்பார்வையை குறையாமல் பார்த்துக் கொள்கிறது. ஆரோக்கியமான எலும்புகள் பெற கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் இந்த சப்போட்டாவில் அதிக அளவு உள்ளது.
சத்துக்களின் குறைபாட்டின் காரணமாக நம் எலும்புகளானது ஆற்றலை இழக்கின்றது. சப்போட்டாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சக்தி அதிகரிக்கப்பட்டு எலும்புகள் வலுவடைகிறது. மலச்சிக்கல் நீங்க சப்போட்டாவின் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. இது உடலின் குடல் ஆரோக்கியத்தை அதிகரித்து உடலை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
No comments:
Post a Comment