Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 15, 2020

அரசு ஊழியர்களை பரிசோதனை செய்ய தமிழக அரசு உத்தரவு!

அனைத்து துறை அரசு ஊழியர்களையும் மருத்துவ உபகரணம் மூலம் பரிசோதிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் இயங்கி வருகிறது. அந்த வகையில் வாரத்தின் 2 நாட்கள் தவிர சென்னை தலைமை செயலகமும், முழு பணியாளர்களுடன் இயங்கி வருகிறது. அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், காவலர்கள் உட்பட பலர் தினமும் தலைமை செயலகத்துக்கு வந்து செல்கின்றனர். கடந்த 5 நாட்களுக்கு முன்னர், தலைமை செயலக அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கொரோனா இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின.

இதனால் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அனைத்து துறை அரசு ஊழியர்களையும் மருத்துவ உபகரணம் மூலம் பரிசோதித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் ஊழியர்களின் ஆக்சிஜன் அளவு போன்றவற்றை பரிசோதித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment