Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, October 1, 2020

ஆசிரியர்கள் NISTHA Online Course -ல் எவ்வாறு இணைய வேண்டும் ? பயிற்சிக்கான வழிமுறைகள் வெளியீடு.


இப்பயிற்சியில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும்.

அரசுப்பள்ளி , அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுய உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்.

இப்பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் Telegramme Group -ல் இணைய வேண்டும்,.

இப்பயிற்சியில் பங்கேற்க உள்ள ஆசிரியர்கள் DIKSHA app Download செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

QRScanner code app Download செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள் EMIS Teacher ID மற்றும் Password ஐ பயன்படுத்தி NISTHA Online Course -ல் இணைய வேண்டும்.

மேற்பார்வையாளர்கள் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் , அரசுப்பள்ளி , அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களை வட்டார வளமைய அளவில் ஒரு குழுவாக இணைக்க வேண்டும்.

சுய உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்களை வட்டார வளமைய அளவில் ஒரு குழுவாக இணைக்க வேண்டும்.

ஒவ்வொரு வட்டார வளமைய அளவிலான குழுவிலும் SRG ( சென்ற ஆண்டு NISTHA பயிற்சி வழங்கிய ஆசிரியப்பயிற்றுநர்கள் , DIET விரிவுரையாளர்கள் மற்றும் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடம்பெற வேண்டும்.

மேற்காணும் பணியினை விரைவாக செய்து முடிக்க அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ( பொ ) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment