Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 21, 2020

TET தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என அறிவிப்பு.

Agenda Item No. 7 : Consideration of the Issue related to extension of Validity of Teacher Eligibility Test from Seven years to Life time . The Council considered the agenda item and approved the validity of TET certificate changing it from 7 years to the Life time. This provision would have prospective effect and for those have already passed out ( already having TET certificate ) , NCTE would take legal opinion and will act accordingly.

TET தேர்வர்களுக்கு மகிழ்வான செய்தி :

ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட்) ஒரு முறை தேர்ச்சி பெற்றால் போதும் அது ஆயுள் முழுவதும் செல்லும் என்று தேசிய ஆசிரியர் கல்விக்குழு ( NCERT ) அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே அதற்கான சான்றிதழ் செல்லும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டு அவை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இனிவரும் நாள்களில் ஆசிரியர் தகுத்த தேர்வு எழுதுவோருக்கு, ஆயுள் முழுவதும் செல்லும் வகையில் சான்றிதழ் அளிக்கப்படும்.

ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றோருக்கு, ஆயுள் சான்றிதழ் நீட்டிப்பு வழங்குவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 80 ஆயிரம் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் நீட்டிப்புக் கோரி போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Plz see the Agenda Item No.7
TET Certificate Valid for Life Time - NCTE Letter - Download here...

No comments:

Post a Comment