Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, October 21, 2020

இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - மாணவர்களின் எண்ணிக்கை விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

பள்ளிக் கல்வி - இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் (Special Incentive) - 2020-21 ஆம் கல்வியாண்டில் பயிலும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம்.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ / மாணவிகள் எக்காரணம் கொண்டும் தங்கள் படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்திட ஊக்கம் அளிக்கும் வகையில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் 2011 ஆம் கல்வியாண்டு முதல் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

எனவே மேற்கண்ட திட்டத்தை 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 10 , 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களின் எண்ணிக்கை விவரங்களை இனவாரியாக ( சுயநிதி பாடப் பிரிவு நீங்கலாக ) இணைப்பில் கண்டுள்ள மூன்று படிவங்களில் பூர்த்தி செய்து ksec.tndse@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 23.10.2020 க்குள் அனுப்பிவிட்டு , முதன்மைக்கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலினை இணை இயக்குநர் ( தொழிற்கல்வி ) பெயரிட்ட முகவரிக்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment