Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 25, 2020

நாளை 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை !

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக நாளை 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் தற்போது அறிவித்து உள்ளார். புயலின் தாக்கம் மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த முதல்வர் இவ்வாறு அறிவித்து உள்ளார்.

நிவர் புயல் !

வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிவர் புயலாக மாறி வலுப்பெற்றுள்ளது. அப்புயல் இன்று (25.11.2020) அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கடலோர பகுதிகளில் ஏற்கனவே பெய்து கொண்டுள்ள மழையால் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறை !

இதனால் புயல் முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளாக அணைகளில் உள்ள தண்ணீர் ஏரிகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. 4000 கன அடிக்கு மேல் தண்ணீர் வரத்து இருப்பதாக பொதுப்பணித்துறை தகவல்கள் அளித்துள்ளது. எனவே இப்பணிகளை ஆய்வு செய்து விட்டு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் இது குறித்து விளக்கம் அளித்தார்.

அதில், ஏரிகளில் தண்ணீரினை திறந்துவிட்டு இருப்பதால் மக்கள் அச்சம் அடைய தேவை இல்லை. அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகை, கடலூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (26.11.2020) பொது விடுமுறை விடப்படுவதாகவும் அறிவித்து உள்ளார்

No comments:

Post a Comment