JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
முதுநிலை மாணவர்களுக்கு திட்டமிட்டபடி டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்களின் நலன்கருதி ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் முதுநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு டிசம்பர் 2ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால் செய்முறை தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது என்பதால் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 2ஆம் தேதி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்றும், இதர வகுப்புகளுக்கான கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment