Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 4, 2020

பள்ளிசாராவயது வந்தோர் எழுத்தறிவு கல்வித்திட்டப்பணிகளில் இருந்து தொடக்க,நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியப்பெருமக்களை முழுமையாக விடுவித்திடுக!பாதுகாத்திடுக!- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர் மன்றம் நா.சண்முகநாதன் கோரிக்கை!

கொரோனா அச்சம் சமூகத்தில் நீங்கியபின்பு மத்திய,மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீட்டில் அனைத்து அரசுத்துறைகளின் ஒருங்கிணைப்பில் எழுத்தறிவு திட்டத்தை மேற்கொள்க!நடைமுறைப்படுத்துக!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர் மன்றம் நா.சண்முகநாதன் கோரிக்கை!


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர்.மன்றம்.

நா.சண்முகநாதன் விடுக்கும் செய்தி அறிக்கை:

*தமிழ்நாட்டில் பள்ளிசாரா வயதுவந்தோர் கல்வித்திட்ட துறையின் மூலமாக 15வயதுக்கு மேற்பட்டுள்ள எழுத்தறிவு அற்றவர்களை கண்டறிந்து எழுத்தறிவு அளிக்கும் பணி தொடங்கி இருப்பதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் பெரிதும் வரவேற்கிறேன். ஆனாலும் இத்திட்டத்தினை அமுல்படுத்திடும் நடவடிக்கைகளில்



காணப்படும் குறைபாடுகள் முழுமையாக களையப்படவேண்டும் என்று தமிழக அரசிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.*

*பதினைந்து வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு அற்றவர்களை கண்டறியும் பணிகளை தற்போது கொரோனா காலத்தில் மேற்கொள்வது பொருத்தமற்றதாகும். நடைமுறை சிக்கல்கள் கொண்டதாகும். இக்கணக்கெடுப்பு பணியில் இருந்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் முழுமையாக விடுவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.*

*எழுத்தறிவு இல்லாத மக்களுக்கு எழுத்தறிவிக்கும் கற்பித்தல் பணிகள் செய்திட ஊதியம் அறவே வழங்கப்படாது என்று கூறப்படுவது நியாயமற்றதாகும். பள்ளிசாரா வயதுவந்தோர் எழுத்தறிவு திட்டத்திற்கு கற்பித்தல் பணிகள் செய்திடுவதற்கு தன்னார்வலர்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் கண்டறிந்து நியமித்து எழுத்தறிவு புகட்டவேண்டும் என்பது நடைமுறையில் எந்தவகையிலும் சாத்தியமற்றதாகும். தன்னார்வலர்களை கண்டறிந்து நியமிக்கும் பொறுப்பில் இருந்து பள்ளித் தலைமையாசிரியர்கள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும்.

*எழுத்தறிவு அற்ற இருபது பேர்களுக்கான கற்கும் மையங்களை கொரானா காலத்தில் பள்ளிகளில் அமைப்பது என்பது சிக்கல் நிறைந்ததாகும். பள்ளிகள் படிப்படியாக 




திறக்கப்படும் எனும் அறிவிப்பு வெளிவந்துள்ள நிலையில் பள்ளிகளில் வயது வந்தோர் கற்கும் மையங்கள் அமைப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும்.*

*கொரோனா தீந்தொற்று பரவல் முற்றிலுமாக அடங்கிய பின்பு, அதாவது கொரோனா அச்சம் சமூகத்தில் நீங்கியபின்பு மத்திய,மாநில அரசுகளிடமிருந்து போதுமான நிதி ஒதுக்கீடுகள் பெற்று உள்ளாட்சி ,நகராட்சி, பெருநகராட்சி, சமூகநலத்துறை, வருவாய்த்துறை நிர்வாகங்களின் ஒத்துழைப்போடும், ஒருங்கிணைப்போடும் 15வயதுக்கும் மேற்பட்டோருக்கான எழுத்தறிவு திட்டத்தினை தமிழகத்தில் நடைமுறைப்படுத்திட வேண்டுமாய் தமிழக அரசிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.*

இவண்,

முனைவர், மன்றம்,

நா.சண்முநாதன்,

மாநிலத்தலைவர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.

*புதுக்கோட்டை/03.11.2020.

No comments:

Post a Comment