JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
இன்றைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் சில விஷயங்களை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. மிக எளிதாக வீட்டிற்கு அருகிலோ, பூக்கடையிலோ கிடைக்கும் துளசியில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். துளசி இலைகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது என சமீபத்திய ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது தவிர இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. தினசரி காலை வெறும் வயிற்றில் அருந்தும் துளசி சாறு உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
காலையில் குடிக்கும் தேநீரில் சில துளசி இலைகளைச் சேர்க்கலாம். ரசத்தில் துளசி சேர்த்து துளசி ரசமாக வைக்கலாம். துளசியின் இலைகள் நீரில் உள்ள நச்சுக்கிருமிகளை அழித்து பரிசுத்தமான நீராக மாற்றுகிறது. இதனால் நாம் குடிக்கும் நீரில் சில துளசி இலைகளைப் போட்டு வைக்கலாம்.

தினமும் காலை வெறும் வயிற்றில் 5 துளசி இலைகளை சாப்பிட்டு வர நம்மை தாக்கும் தொற்று நோய்களிலிருந்து எளிதாக விடுபடலாம் என ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment