Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, November 6, 2020

வாட்ஸ் அப்பில் பாதுகாப்பான முறையில் பணத்தை ஒருவருக்கு அனுப்பும் வசதி அறிமுகம்

வாட்ஸ் அப்பில் பாதுகாப்பான முறையில் பணத்தை ஒருவருக்கு அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ)விடம் இருந்து இதற்கான அனுமதி கிடைத்த நிலையில் இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்படும் வாட்ஸ் அப் செயலி, கடந்த 2018 ஆம் ஆண்டு யூபிஐ மூலம் பணம் அனுப்பும் வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த வசதியைப் பயன்படுத்தி பயன்பாட்டாளர்கள் பணத்தை ஒருவருக்கு அனுப்பவும், பெறவும் முடியும். ஆனால் இதற்கான பரிசோதனை குறிப்பிட்ட சில லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் பணம் அனுப்பும் சேவையை வழங்க என்பிசிஐ நேற்று அனுமதி வழங்கியது. இதன் மூலம் வர்த்தகர்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் விற்று, பணத்தை வாட்ஸ் அப் மூலம் பெறலாம். கடந்த ஜூன் மாதம் பிரேசில் நாட்டில் வாட்ஸ் அப் நிறுவனம் பணம் அனுப்பும் வசதியை உலகின் முதல் நாடாக தொடங்கியது.

இந்தியாவைப் பொறுத்தவரை பேடிஎம், கூகுள் பே, வால்மார்ட் நிறுவனத்தின் ஃபோன்பே, அமேசான் பே ஆகியவை ஏற்கெனவே வலிமையாக இருக்கும் நிலையில், அவர்களோடு வாட்ஸ் அப் நிறுவனமும் போட்டியிடும். ஏறக்குறைய 40 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பேமெண்ட் சர்வீஸ் ஆப்ஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பணம் செலுத்தும் வசதி முதல் கட்டமாக சமீபத்திய ஐபோன் வெர்ஷன்கள், ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே கிடைக்கும்.

வாட்ஸ் அப் பேமெண்ட் ஆப்ஸில் கடுமையான பாதுகாப்பு வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளதால், ஒவ்வொரு முறை பணம் அனுப்பும்போது, தனிப்பட்ட பாதுகாப்பு எண்களைப் பதிவு செய்தபின்பே பயன்படுத்த முடியும் வகையில் செயலி அமைக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் பணம் அனுப்பும் சேவைக்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment