Monday, November 16, 2020

தமிழக அரசின் துறை சார்ந்த பதவி உயர்வுகளை துறை தலைவர்களே அனுமதிக்கலாம்: தமிழக அரசு அரசாணை

தமிழக அரசின் துறை சார்ந்த பதவி உயர்வுகளை துறை தலைவர்களே அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை பதவி உயர்வுகளை துறை தலைவர்களே அங்கீகரிக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

பதவி உயர்வு தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணைய குழுத்தலைவரிடம் ஒப்புதல் பெறும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பதவி உயர்வுகளுக்கு மட்டும் ஆணையத்தின் பரிந்துரையை பெற்றால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment