Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, November 28, 2020

மூட்டு வலி, உடல் சூட்டை தணிக்க வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்க..

வெயிலில் அதிக நேரம் அலைந்து திரிபவர்களுக்கு ஏற்படும் நீர்க்கடுப்பு பிரச்சனையை சரிசெய்ய, ஒரு வெங்காயத்தை நறுக்கி அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி சிறிது நேரம் ஆறவிட்டு குடித்தால் நீர்க்கடுப்பு சரியாகும்.

வெயில் காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணத்தால் சிலருக்கு உடலில் ஏற்படும் கட்டிகளை சரிசெய்ய, வெங்காயத்தை பிழிந்து சாறு எடுத்து அதை அந்த கட்டியின் மீது தடவி வந்தால் விரைவில் அந்த கட்டி சரியாகும்.

மேலும் உடல் சூட்டை தணிக்க வெங்காயத்தை சிறிதாக நறுக்கி அதை நெய்யில் போட்டு வதக்கி சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் வெங்காய சாற்றை கடுகு எண்ணெயுடன் கலந்து மூட்டின் மீது தடவி வர மூட்டு வலி குணமாகும்.

சீதபேதி ஏற்பட்டால் வெங்காய சாற்றை தேனுடன் கலந்து குடித்து வர சீதபேதி சரியாகும்.

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.

No comments:

Post a Comment