Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, November 29, 2020

தள்ளிவைக்கப்பட்ட MBBS கலந்தாய்வு நாளை முதல் மீண்டும் நடைபெறும்

'நிவர்' புயலால் தள்ளிவைக்கப்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் கடந்த 18-ம்தேதி தொடங்கியது. 20-ம் தேதி வரை 3 நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு நடந்தது. இதையடுத்து, கடந்த 21-ம் தேதி மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்கள் வாரிசுகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடை பெற்றது.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 23-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 4-ம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. பொது பிரிவினருக்கான முதல்நாள் கலந்தாய்வு நடைபெற்றது. இதையடுத்து, ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை 5 நாட்கள் நடைபெற இருந்த கலந்தாய்வு தள்ளிவைக் கப்பட்டது.

இந்நிலையில் மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

நிவர் புயலால் தள்ளிவைக்கப்பட்ட கலந்தாய்வு நவம்பர் 30-ம் தேதி தொடங்குகிறது. இதன்படி நவ.30, டிச.1 முதல் 10-ம் தேதி வரை (6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) கலந்தாய்வு நடைபெறும். தினமும் சுமார் 500 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படவுள்ளனர்.

மாணவர்கள் எந்த தேதியில், எந்த நேரத்தில் கலந்தாய்வுக்கு வரவேண்டுமென மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment