Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 26, 2020

புதிய வகை கொரோனாவுக்கு 7 அறிகுறிகள் -சுகாதாரத்துறை தகவல்

பிரிட்டனில் உருமாற்றமடைந்து பரவி வரும் கொரோனாவுக்கு 7 புதிய அறிகுறிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரிட்டனிலிருந்து வந்தவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வருமாறு தமிழக சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் உள்பட எந்த ஒரு வைரசும் உருமாறும் என்பது இயற்கையான ஒன்றாகும்.2019 டிசம்பரில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா இதுவரையில் பல்வேறு வடிவங்களில் மாறியிருக்கிறது. 

இப்போது இங்கிலாந்தில் காணப்படும் வைரசின் வடிவம் வி.யு.ஐ. 202012/01 மற்றும் பி 1.1.7 என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. புதிய வடிவம் பெற்றுள்ள கொரோனா வைரஸ், 70 சதவீதம் அதிவேகமாக பரவக்கூடியது என்பதுதான் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

உருமாற்றம் பெற்ற வைரஸ் குறித்து இங்கிலாந்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே உள்ள 

காய்ச்சல், 
ஜலதோஷம், 
தொண்டை வலி, 
நாவில் சுவையின்மை 

உள்ளிட்டவை அறிகுறிகளாக கூறப்பட்டுள்ளது. இவற்றுடன், 

சேர்ந்து சோர்வு, 
பசியின்மை,
தலை வலி, 
வயிற்றுப்போக்கு, 
மன குழப்பம், 
தசை வலி, 

தோல் அரிப்பு ஆகிய 7 புதிய அறிகுறிகள் தென்படுவதாக கூறப்பட்டுள்ளது. 

இந்த புதிய வகை கொரோனா வைரஸ் முன்பை விட அதிக உயிரிழப்பு மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment