Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 26, 2020

இந்த ஆண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிக்க முதலமைச்சரிடம் ஆலோசனை : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

‘‘இந்த ஆண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும்,’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சாவக்காட்டு பாளையத்தில் மினி கிளினிக்கை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.பின்னர் இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, கிராமங்களை நோக்கி மருத்துவர்கள், செவிலியர்களுடன் 2000 மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 52.47 லட்சம் மடிக்கணிணி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதலமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் தான் முடிவு செய்ய வேண்டும். 

இந்த ஆண்டு பூஜ்யம் கல்வி ஆண்டாக அறிவிப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும். சூழ்நிலைக்கேற்ப முதலமைச்சர் என்ன முடிவெடுக்கிறாரோ அந்த முடிவுகளை தான் பள்ளி கல்வித்துறை செயல்படுத்தும்.

No comments:

Post a Comment