JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா உள்ளிட்ட பயிற்சிகளை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும் என அண்ணா பல்கலைகழகம் இணைப்பு கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கல்லூரிகளில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களை பணியமர்த்தும் போது அவர்களது அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்த்துவிட்டு அசல் சான்றிதழ்களை அவர்களிடம் திருப்பி கொடுத்துவிட்டு நகலை மட்டுமே பெற வேண்டும். பணியமர்த்துதல் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும்.
வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பேராசிரியர்களுக்கு யோகா உள்ளிட்ட பயிற்சிகளை வழங்க வழிவகை செய்ய வேண்டும். ஆசிரியர், மாணவர் விகிதம் சரியாக பேணப்பட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment