Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 22, 2020

காலிப்பணியிட விபரம் சேகரிப்பு: பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

கல்வித்துறை உத்தரவால் 'டெட்' தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள், எதிர்பர்ப்பில் உள்ளனர்.பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படாத சூழலில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து கல்வி துறையினர் ஆலோசித்து வருகின்றனர். 

நடப்பாண்டு, பெரும்பாலான அரசு பள்ளிகளில், அதிகளவு மாணவர்கள் இணைந்துள்ளனர்; ஆனால், போதிய ஆசிரியர்கள் இல்லை. பல பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது; ஆனால், தேவைக்கு மிகுதியாக ஆசிரியர்கள் உள்ளனர்.'இச்சூழலில், ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ள பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடம் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. 

விரைவில் 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், புதிய ஆசிரியர் நியமனத்துக்கு தகுதி வாய்ந்த பணியிடங்கள் கணக்கிடப்படும்; அரசு உத்தரவுக்கு ஏற்ப, பணியிடம் நிரப்பப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

'டெட்' தேர்வெழுதி, தேர்ச்சி பெற்று, கடந்த, 2013 முதல் வேலை கிடைக்காமல் காத்துள்ள பல பட்டதாரி ஆசிரியர்கள், 'வேலை கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

No comments:

Post a Comment