JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
'ஆதிதிராவிடர் நலத்துறையின் விடுதிகளில் சமையலர், தூய்மை பணியாளர்கள் பணியிடத்திற்கு வரும் ஜன.,8க்குள் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு, 13 சமையலர் பணியிடங்கள், காலமுறை ஊதியத்தில் ஐந்து தூய்மை பணியாளர் பணியிடங்கள், தொகுப்பூதியத்தில், 14 தூய்மை பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். 18 - 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில், விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ வரும், ஜன.,8க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment